பறிக்க விரும்புவது
பூக்களைத்தான் - ஆனால்
உதிர்ந்திடும்
வண்ண பூக்களையல்ல
மின்னிடும்
நட்சத்திர பூக்களை - ஏனெனில்
இருளை அகற்றுவதற்கு
ஒளியை ஏற்றுவதற்கு - ஆனாலும்
உலகிற்கு அல்ல
உள்ளங்களிற்கு - ஏனெனில்
அவைதான் மிகவும்
இருண்டு போய்கிடக்கின்றன
என்னால் முடியவில்லை
என்பதை உணர்கிறேன்
என்னால் முடியாது
என்பதும் தெரியும் -ஆனாலும்
முயல்கிறேன்
முயற்சி திருவினையாக்கும்
என்பது உண்மையாயென
பரிசீலிப்பதற்காக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக