என் இனிய பாடசாலை நாட்கள் என்றுமே அழியாது
என் இதயத்துடிப்புக்கு அர்த்தம் தேடித்தந்தது பள்ளிக்கூடமே
பள்ளியின் முதல் நாள் எனது இறுதி நாள் வரை மறையாது
பள்ளியின் முதல் நட்பு என்றுமே அழியாது
தோழியர் கூட்டமாக பள்ளி சூழலை சுற்றியது
தோழியராய் மேடை ஏறி இனிய கீதம் இசைத்தது
உணவை பகிர்ந்து உண்டது
தோழியர் பெயரை மேசையில் கிறுக்கி இரசித்தது
மாணவ தலைவர்களாக பதவி ஏற்றது
உறுப்படியாக தேடிய நட்புகள் பள்ளியில் மட்டுமே
எனது கண்களில் இருந்து நீர் வருகிறது எனது பாடசாலை நாட்களை இழக்க போகிறேன் என்ற போது......
நான் இழந்த பலவற்றை பெற்றது எனது பள்ளிகூடத்திலே
கருவறை இன்பம் சிலநாட்களே ஆனால் எனது பள்ளியறை எனது இறுதி நாள்வரை நீடிக்கும்
வாழ்வில் இன்பம் என்பது பள்ளியிலே அதிகம்
வாழ்வில் மறக்கவே முடியாத நாட்கள் மீளவும் பார்க்க ஆசை படும் நாட்கள் எனது பள்ளி நாட்கள்
1 கருத்து:
வாழ்வில் இன்பம் என்பது பள்ளியில் மட்டுமே........
கருத்துரையிடுக