23 மே, 2011

பாடசாலை

காலங்கள் மாறலாம் நேரங்கள் கழியலாம்
என் இனிய பாடசாலை நாட்கள் என்றுமே அழியாது
என் இதயத்துடிப்புக்கு அர்த்தம் தேடித்தந்தது பள்ளிக்கூடமே
பள்ளியின் முதல் நாள் எனது இறுதி நாள் வரை மறையாது
பள்ளியின் முதல் நட்பு என்றுமே அழியாது
தோழியர் கூட்டமாக பள்ளி சூழலை சுற்றியது
தோழியராய் மேடை ஏறி இனிய கீதம் இசைத்தது
உணவை பகிர்ந்து உண்டது
தோழியர் பெயரை மேசையில் கிறுக்கி இரசித்தது
மாணவ தலைவர்களாக பதவி ஏற்றது
உறுப்படியாக தேடிய நட்புகள் பள்ளியில் மட்டுமே
எனது கண்களில் இருந்து நீர் வருகிறது எனது பாடசாலை நாட்களை இழக்க போகிறேன் என்ற போது......
நான் இழந்த பலவற்றை பெற்றது எனது பள்ளிகூடத்திலே

கருவறை இன்பம் சிலநாட்களே ஆனால் எனது பள்ளியறை எனது இறுதி நாள்வரை நீடிக்கும்
வாழ்வில் இன்பம் என்பது பள்ளியிலே அதிகம்  


வாழ்வில் மறக்கவே முடியாத நாட்கள் மீளவும்  பார்க்க ஆசை படும் நாட்கள் எனது பள்ளி நாட்கள்  

1 கருத்து:

கிருஷ்ணா சொன்னது…

வாழ்வில் இன்பம் என்பது பள்ளியில் மட்டுமே........

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்