ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் பட்டாம் பூச்சிகளுக்கு நந்தவனம் அமைத்துக்கொடுத்தது பள்ளிக்காலன்களே!
சிறப்பாக ஆறு சிட்டுக்குருவிகளை ஒன்றாக இணைத்ததும் இந்த பசுமைக்காலங்களே!
சுதந்திரக்காற்றை களிப்புடன் சுவாசித்து பள்ளியறைக் குறும்புகளுடன் நாட்களைக் கழித்து மகிழ்ந்தது எல்லாமே கற்சுவடு போன்றது.
இறுதியில் பிரிவு என்ற சொல்லைக் கற்கும் காலம் நெருங்குகிறது என்றவுடன் மனதில் ஓர் சிறிய இடத்தில் வலிக்கிறது தான்...
இயற்கை நம்மை பிரிக்க முயல்கிறதோ!
நம் உயிர் உடலை விட்டு பிரிகின்றதோ!
கதிரவன் கதிர்களை வீச மறுக்கின்றதோ!
பௌர்ணமி இன்றி அமாவாசையாய் போகின்றதோ!
நம் நட்பு என்ற இறைவனுக்கு மேலான ஒரு செல்வத்துக்கு அழிவென்பது இல்லை.
இது நம் நட்புக்கு நாம் செலுத்தும் உயிருக்கு மேலான அஞ்சலி.....