21 பிப்ரவரி, 2013

உலக தாய்மொழி தினம் - என் தாய்மொழிக்கு என் முதல் முத்தம்


இன்று உலக தாய்மொழி தினம்,எனது தாய்மொழிக்கான மரியாதையை நான் இன்றாவது செலுத்தி ஆக வேண்டும் ...எனக்கு என் தாய்மொழி சில காலங்களுக்கு முன்பு தான் அதிகமாகபற்று ஏற்பட்டது ..அந்நிய மொழியின் மோகத்தாலோ தெரியவில்லை,என் தாய் மொழியை சில வருடங்களாக  மறந்தே இருந்தேன் என்று சொல்லலாம் .
என் தாய்மொழியை  பொது இடங்களில் பேசுவதற்கும்  மிகவும் சிரமப்பட்டேன்..
இப்போது அதை நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்...என்றும் என் நாவில் தமிழ் தவிழ வேண்டும்..........


என் தாய்மொழி தமிழுக்கு என் முதல் முத்தம்...........





உன்னை காதலிக்கிறேன்
உன்னையே சுவாசிக்கிறேன்
காணும் இடமெல்லாம்
உன்னை வாரி அணைத்து
முத்தமிட்டு
மனதுக்குள் படித்து
மகிழ்ந்தாலும்
உன்னை உரத்துப் பேசத்தான் ஆசை எனக்கு
ஆனால்  உரிமை இழந்தவள்
நான் என்று


நாவுக்குள் உன்னை
உன்னவள் நான் என்று
பெருமை கொண்டாலும்
கண்ணதாசன்
கம்பன் என்று
உன்னைகாதலித்தவர்
பலர் இருக்க
இன்று எனக்கும் போட்டியாய்
வைரமுத்து
வாலி
 என்று பல பேர்
உன்மேல் இச்சை கொள்ள
கலங்கவில்லை என் நெஞ்சம்
தமிழே!!
நானும் உன்னால் கவிஞன் தானே என்று.............

11 பிப்ரவரி, 2013

நம் நட்புக்கான நினைவுகள்..

பூக்களின் புதிய மொழியாய் மலர்ந்து  நட்பு வாசல்களை திறந்தாயே..
நம் நாவுக்குள் பல நட்பை அடக்கி வைத்து பெருமை கொண்டோமே
தோழியருக்காக சேர்ந்து வைத்த வார்த்தைகள் எல்லாம் இன்று நினைவிழந்து விடுகின்றனவே!

உணர்வான சிநேகத்துக்கு உணர்விருந்தால் சொல்லுமே சிநேகிதியே நீ என்னை பிரிந்து செல்கின்ற போது நான் அனுபவிக்கப் போகின்ற வலிகள் என்னவென்று.

எங்களுக்கு பலவற்றைக் கற்றுத்தந்தாய் ஆனால் பிரிவை மட்டும் கற்றுத்தர மறந்து விட்டாயே!

நண்பர்களை மறக்கவும் முடியாமல் மறந்தது போல் நடிக்கவும் முடியாமல் உங்கள் கிறுக்கல்களை வாசித்த படி எங்களை மறந்து சிரிக்க போகின்றோம் பைத்தியக்காரர்களாக...

பிரிவுகள் நிரந்தரமற்றவை அறிவோம்
எங்களை விட்டு நீங்கள் பிரிந்து சென்றாலும்
எங்கள் மெய்யை விட்டு சுவாசம் சென்றாலும்
எங்கள் கல்லறையிலும் நம் நட்புக்கான நினைவுகளை சில்லறைகளாக சேமித்து செதுக்கி காத்திருப்போம்...நட்பே உனக்கு கடன்காரிகளாக..

எங்கள் கனவுகளாக எல்லம் வெறும் கனவுகள் அல்ல
அவை அனைத்தும் நாங்கள் வாழ்க்கை தான்!

தோழியர்களே எங்களை மன்னித்து விடுங்கள்
பள்ளியில் நான்கு சுவருக்கு செய்த குறும்புகள்  அரட்டைகள் சண்டைகள்
காயங்களைத் தந்திருந்தால் மன்னித்து விடுங்கள்
எங்களோடு நீங்கள் வந்த நட்புப்பயணங்களில் காயப்பட்டிருக்கும் உங்கள் பாதங்கள்
அதற்கு சேர்ந்து மன்னிப்புக்கேட்கிறேன்..
நம்மை மறந்து நமக்குல் நாம் நட்பு என்ற சிலையை செதுக்கியதைக் கண்டால் சிற்பியும் தோற்றுப்போவார்கள்

வானத்து நிலவும் சோகத்தில் தேய்கின்றதாம் பூமிக்கு தனக்கு போட்டியாய் இன்னோர் நிலவா என்று எங்களைப்பார்த்தும்......

அழகான நாட்களும் அழியாத சோகங்களும் தந்த் பள்ளிக்கூடமே 
கலைந்த மேகங்கள் மீண்டும் சேர்வது போல பிரியப்போகின்ற எமது நினைவுகளையும் உன்னோடு மீண்டும் சேர்த்துக்கொள்வாயா.............

பள்ளிகூடம்

Oops....:-pநேற்றுத்தானே ஜனனித்தோம் என்று எண்ணி இருந்தோம்
ஆனால் இரு படி தாண்டி இன்று பள்ளி பருவத்தை கடக்கின்றோம்
அப்பா நேற்றுத்தான் பாடசாலை வாயில் விட கதறி அடித்து வீடு ஓடினோம்
அன்று பள்ளி வா வா என்று அழைத்தது
இன்றோ பள்ளியை விட்டு வீடு செல்வதற்காக அழுகின்றோம்n
பள்ளியின் வாயில் போ போ என்று சொல்வது கேட்கிறது,
எம்மை 10 மாதம் சுமந்த தாயை சில நொடியேனும் மறக்க வைத்து 13 ஆண்டுகள் கல்வித்தாயாய் சுமந்தாயே......
பல நட்புகள் சில பகைகள் மறந்துவிடுவோமா எளிதில்
எங்கள் வாழ்க்கையை கூற முன்பு வார்த்தைகள் தேடிப்பார்ப்போம்
எங்கள் வாழ்க்கையே தொலைந்து போய்விட்டது
இனி எங்கே வார்த்தைகளை தேடுவோம்...

தாயக்கண்டோம் 
தாயவள் காட்டிய தந்தை கண்டோம்
தாய் தந்தை காட்டி இருந்த உலகைக் கண்டோம்
இருப்பினும் தொலைந்து போயிருந்த
எங்களை எங்களுக்கே அறிமுகம் செய்து வைத்தது நீதானே!

நாங்கள் இழக்கப்போகும் நினைவுகளை உனது ஒவ்வொரு அங்கத்திலும் தேடுகிறோம் தருவாயா ஒரு நாட்குறிப்பேடாக............!


என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்