| யாருக்காகவும் என் எண்ணங்களை மாற்றிக் கொள்வதில்லை, வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையே நான் அதிகம் பதிவு செய்கிறேன். அது எனக்கு திருப்தியை தருகிறது என சொன்னவர் இயக்குனர் பாலா. |
| ஆம்… இந்த வார்த்தைகளுக்கு அவரின் சமீபத்திய படைப்பான ‘பரதேசி’யும் சரியான பதில் அளித்திருக்கிறது. படத்தின் தலைப்பைப் போலவே பரதேசிகளாய் மலைத்தோட்டப்பயிரான தேயிலை எஸ்டேட்களுக்கு அடிமைகளாய் போனவர்களின் வாழ்க்கை நிஜத்தை சுருதி மாறாமல் வலியோடு பதிவுசெய்திருக்கிறார் இயக்குனர் பாலா. வழக்கமான சினிமாவில் இருக்கும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கிளாமர், அழகு, நெளிவு, கொமெடி என எந்த அடைப்புக்குள்ளும் பாலாவின் படத்தை அடைக்க முடியாது. இந்த பரதேசியும் அப்படித்தான். சுதந்திரத்திற்கு முன்பு தொடங்குகிறது கதை. தேயிலை தோட்டங்களை பராமரிக்க, தேயிலை பறிக்க அப்பாவி மக்களை கொத்தடிமைகளாக ஆங்கிலேயர்களிடம் அழைத்து சென்று பணம் பறிக்கும் கொடூரர்கள் பற்றியதுதான் கதை. ஒற்றை வரியில் சொல்லப்போனால் தேயிலையை கொதிக்க வைத்தால் ரத்தச் சிவப்பாக வருமே இனி அதை பார்க்கும் போதெல்லாம் இந்த கொத்தடிமைகளின் கால் நரம்புகளை அறுத்து தப்பிக்க விடாமல் செய்த கொடூரத்தின் நினைவுதான் வரும், கிராமத்தில் தண்டோரா போடும் அப்பாவி அதர்வா, வீடு வீடாக போய் அவர்கள் கொடுக்கும் அரிசி, கம்பு, கேப்பையை வாங்கி பிழைப்பு நடத்துபவன். அதே ஊரில் இருக்கும் வேதிகா மீது ஆசை. வேதிகாவுக்கும் இவன் மீது ஆசை. ஒரு சூழலில் துறு துறு வேதிகாவும், அதர்வாவும் திருமணத்திற்கு முன்பே இணைந்து விடுகிறார்கள். இந்த சூழலில், அந்த ஊருக்கு கூலிக்கு ஆள் பிடிக்க வருகிறான் கங்காணியார் எனச் சொல்லப்படும் ஊர் பெரியவன். மலை நாட்டில் வேலை, தங்குவதற்கு இடம், கைநிறைய பணம் அப்படி இப்படி என ஆசை வார்த்தை காட்டி கொஞ்சம் காசு கொடுத்து அந்த ஊர் மக்களை கொத்தடிமைகளாக டீ எஸ்டேட்டுக்கு அழைத்து போகிறான். போகிற வழியிலேயே நடந்து நடந்து கால் கடுத்ததில் ஒருவன் விழுந்து சாக கிடக்க அவனை காப்பாற்ற வழிகாட்டாமல் அப்படியே விட்டு விட்டு ஆடுமாடு மந்தைகளாகளாய் அவர்களை அழைத்து செல்கிறான் அந்த கங்காணியார். மலையில் போய் சேர்ந்ததும் அங்கே ஒண்டுகுடித்தன குடிசைகளாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் குடிசைகள்… எல்லாவற்றிலும் ஆட்கள். அதர்வாவுக்கு ஒதுக்கப்பட்ட குடிசையில் ஏற்கனவே தன்ஷிகா தன் குழந்தையோடு தங்கியிருக்க. அதர்வாவுக்கு வெளியேதான் இடம்… அங்கு காட்டுமிராண்டித்தனமாய் கொத்தடிமைகளிடம் வேலை வாங்குகிறார்கள். ரவுண்ட்ஸ் வரும் வெள்ளைக்கார துரை எந்த பெண்ணை பார்க்கிறாரோ அந்த பெண்ணை அடைய நினைக்கிறார்… மறுப்பு தெரிவித்தால் அடித்து உதைக்கிறார்கள்… கேட்பதற்கு யாரும் இல்லை… எதிர்த்து கேட்டால் கண்மூடித்தனமாக தாக்குகிறார்கள்.,.. இந்த கொடுமைகளில் இருந்து விடிவே இல்லையா என யோசிக்கும்போது… கிராமத்தில் கல்யாணமே கட்டிக் கொள்ளாமல் அதர்வாவின் பிள்ளையை வயிற்றில் வாங்கியதால் வேதிகாவை வீட்டை விட்டு விரட்டுகிறார்கள்…பின்னர் அதர்வாவின் பாட்டி பராமரிப்பில் அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறக்கிறது… இங்கே கடும் போராட்ட அடிமை வாழ்க்கையில் ஒப்புக் கொண்ட காலம் முடிந்ததும் ஊர் திரும்பும் நாள் வரும்போது ஏற்கனவே திட்டமிட்டபடி கங்காணியார் பொய் கணக்கு சொல்லி யாரையும் வெளியே அனுப்பாமல் மீண்டும் அந்த கொட்டடைக்குள் அடைத்து விடுகிறார்கள். நடுஜாமத்தில் அந்த காட்டுக்குள் இருந்து அதர்வா தப்பி ஓட்டம் பிடிக்க… காடு, மேடுகளில் ஓடுகிறான்… விழுந்து எழுந்து ஓடுகிறான்… அப்பாடா தப்பிவிட்டான் என நினைத்து பார்த்தால் அவனை சுற்றிலும் கங்காணியாரின் ஆட்கள் தடியோடு நிற்கிறார்கள். அதர்வாவை கட்டி தூக்கி வருகிறார்கள்… ஆஸ்பிட்டல் என எழுதப்பட்ட ஒரு குடிசைக்குள் தூக்கிச் சென்று கை கால்களை கட்டி…… ப்பா… என்ன ஒரு கொடூரம்… நினைத்து பார்க்கவே அத்தனை கொடூரமாக இருக்கிறது.ஆம்..கால் நரம்பினை துண்டிக்கும் அநியாயம் நடக்கிறது. அதன்பின்னர் அதர்வாவுக்கு என்ன ஆனது… வேதிகாவுடன் ஒன்று சேர்ந்தானா, தன்ஷிகா என்ன ஆனாள், கொத்தடிமை கூட்டம் மீண்டதா என்பதை முன்னிலும் வலியோடு ‘பரதேசி’ சொல்கிறான். சுதந்திரத்திற்கு முன்பு வெள்ளையர்களிடம் அடிமை பட்டு கிடந்தோம் என படித்திருப்பீர்கள். எப்படி கொத்தடிமைகள் நடத்தப்பட்டார்கள் என்பதை இந்த ‘பரதேசி’ வெளிச்சம் போட்டு காட்டுகிறான். ஒரு உண்மையை அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும்… நம்மை அடிமைப்படுத்திய வெள்ளையனை விட அவனுக்கு கூஜா தூக்கிய நமது எட்டப்பர்களான கங்காணியார்கள்தான் வெள்ளையனை விட நம்மை மிக கேவலமாக நடத்தியிருக்கிறார்கள். இந்த பரதேசி படத்தில் சொல்லப்படும் உண்மை சம்பவத்தில் தேயிலை தோட்டத்திற்கு வேலை செய்ய கொத்தடிமைகளை அழைத்து வரும் பொறுப்பு கங்காணியார்கள் எனப்படும் நமது ஆட்களிடம்தான் ஒப்படைக்கப்படுகிறது. அவர்கள்தான் கிராமத்து அப்பாவி மக்களை ஏமாற்றி அங்கே அழைத்து செல்கிறார்கள். வெள்ளைக்காரனிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக வேலைக்கு வந்தவர்களை அடித்து துவைத்து கொடூரமாக நடத்துவதோடு, அவர்கள் தப்பிக்காமல் இருப்பதற்காக கால் நரம்புகளையும் கட் செய்யும் கொடூரங்களையும் அரங்கேற்றுவது கங்காணியார்களின் கைகூலிகள்தான். இதுபோன்ற கொடூரங்களை வெள்ளையர்களை சந்தோஷப்படுத்துவதற்காக நம் ஆட்களே நம்மை அடிமைப்படுத்தி கொடுமைபடுத்தியிருக்கிறார்கள் என்பதை பாலா மிக தெளிவாக செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார். படம் தொடங்கியதில் இருந்தே ஒரு வித இறுக்கம் நமது மனசுக்குள் வந்து உட்கார்ந்து விடுகிறது. படம் முடியும்போது அதர்வாவின் பெருங்கூக்குரல் அழுகையோடு நம்மையும் கனத்த இதயத்தோடு வெளியே அனுப்புகிறது. சுவை மிகுந்த சுறுசுறுப்பு தரும் பானம் எனப்படும் தேயிலையை இனி குடிக்கும்போதெல்லாம் ‘பரதேசி’யின் கொடூர அடிமைத்தனம் கண்முன்பாக நிழலாடும் என்பதில் சந்தேகம் இல்லை. முரளியின் மகன் அதர்வாவுக்கு இந்த ‘பரதேசி’ நிச்சயம் பேர் வாங்கித் தரும் என்பதில் சந்தேகமே இல்லை. தன்ஷிகாவை விட வேதிகாவுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ள படம். அழகான தேவதைகளாக இருந்த வேதிகாவும், தன்ஷிகாவும் ஆளே தெரியாமல் கேரக்டர்களாக ஒன்றிப்போய் இருந்தது இயக்குனரின் ஆளுமையை காட்டியது. இந்திய சினிமாவில் இதுபோன்ற வாழ்க்கையின் வலியை… இன்னொரு பக்க நிஜத்தை அப்படியே பதிவு செய்யும் செல்லுலாய்ட் நிஜங்கள் அத்திப்பூத்தார்போல எப்போதாவதுதான் தலை காட்டும் பாலா எடுத்துக் கொண்ட கருத்தில் கொஞ்சமும் பிசகாமல் அப்படியே பயணம் செய்து ‘பரதேசி’யை நமக்கு கொடுத்திருக்கிறார். வெள்ளைக்காரனை குஷிப்படுத்தவோ… அல்லது என்ன காரணமோ ஒரு மதத்தின் நையாண்டித்தனத்தை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்… நிஜத்தில் சொல்வதானால் வெள்ளைக்காரன் வராமல் போயிருந்தால் இன்னமும் இதுபோன்ற இருட்டுப்பக்கங்களில்தான் நமது வாழ்க்கை இருந்திருக்குமோ என்னவோ… ஜி.வி.பிரகாஷின் இசையும், பின்னணி இசையும் பலஇடங்களில் நம்மை நெகிழ வைத்தாலும் இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. வாழ்க்கையின் வலியை உணர வைக்கும் வயசு பக்குவம் இல்லாதவனிடம் வாய்ப்பு சென்று விட்டதோ என்ற தோற்றத்தை சில இடங்களில் ஏற்படுத்துகிறது. பாலா, வைரமுத்துவின் பாடல்வரிகளிலேயே மொத்த கதையும் அடங்கிவிடுகிறது. சில இடங்களில் பாடல்களிலேயே கதையையும் பயணிக்க வைத்து அடிமைத்தன பாரத்தை அதிகப்படுத்தியிருக்கிறார் பாலா. ‘பரதேசி’ நிச்சயம் வலி மிகுந்தவன்… வாழ்க்கையை தொலைத்தவன்… நன்றி cineulagam பாலாக்கு நான் தலை வணங்குகிறேன்..........Great one.............. |
16 மார்ச், 2013
‘பரதேசி’ நிச்சயம் வலி மிகுந்தவன்… வாழ்க்கையை தொலைத்தவன்…
7 மார்ச், 2013
விதி
விதிகளை
விலக்கி வைக்கவும் முடியாது
விதிகளுக்கு
விதிவிலக்காகவும் முடியாது
விதைகள்
விருட்சமாவதும் விதிதான்
விருட்சங்கள்
விறகாவதும் விதிதான்
பயணத்தின்
பாதைகளல்ல விதி
சந்திக்க வேண்டிய
சந்திகள்தான் விதி
பாதைகளை தீர்மானிக்கும்
பரிபூரண சுகந்திரம் உனக்கு உண்டு
சந்திகளை சந்திக்க வேண்டிய
சங்கடமான சந்தர்ப்பமும் உனக்கு உண்டு
பாதைகள் தோறும்
பதறி அழுகின்ற
பரிதாபமான நிலையில்
பலபேர் உண்டு
கணப்பொழுதில்
கடக்க வேண்டிய விதியை
கணம்தோறும் எண்ணியே
கனமான பொழுது கழிகிறது
விதிகளை
சந்தித்தே ஆக வேண்டும் - ஆனால்
விதிகளை
சிந்தித்தே வீணாக வேண்டாம்
அவ்வப்போது சந்திக்க வேண்டிய
அற்ப நொடிகள்தான் விதி - அதற்கு
ஆயுள் முழுவதையும் அர்ப்பணிப்பது
அடி முட்டாள்தனம் அல்லவா
பாதைகளில் உள்ள
சுகங்களையும்
சுவாரசியங்களையும்
சுபீட்சங்களையும்
சுவாசிக்க கற்றுக்கொள்சந்திகளில் உள்ள
சங்கடங்களையும்
சஞ்சலங்களையும்
சரிவர சுதாகரித்துக்கொள்
அனுபவம்
ஆறாவது அறிவு
அங்கங்கேயுள்ள உதாரணங்கள்
அதனைக்கொண்டு
விதியை வெல்லலாம்
விதி - உன்னோடு
விளையாட விடாதே
விதியோடு - நீ
விளையாடு ...........
5 மார்ச், 2013
நானும் உலகமும்
நான்
விரதம் இருக்க பழகிக்கொண்டேன்
உலகம் - என்னை
பட்டினி போட பழகிக்கொண்டது
நான்
உதவி செய்ய தொடங்கினேன்
உலகம் - என்னை
உபயோகிக்க தொடங்கியது
நான்
தட்டி கொடுக்க தயாரானேன்
உலகம் - என்னிடம்
தட்டி பறிக்க தயாரானது
நான்
உணர்வுகளை மதிக்க கற்றுகொண்டேன்
உலகம் - என்
உணர்வுகளை மிதிக்க கற்றுக்கொண்டது
நான்
சுமைகளை இறக்க வந்தேன்
உலகம் - என்னில்
சுமைகளை ஏற்றி விட்டது
நான்
ஏற்றி விட துணிந்தேன்
உலகம் - என்னை
ஏமாற்றி விட துணிந்தது
இது தான்
உலகம் என்று தெரிந்தும்
நான் என்
இயல்போடு தான் இருக்கிறேன்
விரதம் இருக்க பழகிக்கொண்டேன்
உலகம் - என்னை
பட்டினி போட பழகிக்கொண்டது
நான்
உதவி செய்ய தொடங்கினேன்
உலகம் - என்னை
உபயோகிக்க தொடங்கியது
நான்
தட்டி கொடுக்க தயாரானேன்
உலகம் - என்னிடம்
தட்டி பறிக்க தயாரானது
நான்
உணர்வுகளை மதிக்க கற்றுகொண்டேன்
உலகம் - என்
உணர்வுகளை மிதிக்க கற்றுக்கொண்டது
நான்
சுமைகளை இறக்க வந்தேன்
உலகம் - என்னில்
சுமைகளை ஏற்றி விட்டது
நான்
ஏற்றி விட துணிந்தேன்
உலகம் - என்னை
ஏமாற்றி விட துணிந்தது
இது தான்
உலகம் என்று தெரிந்தும்
நான் என்
இயல்போடு தான் இருக்கிறேன்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா
நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்