7 மார்ச், 2013

விதி


விதிகளை
விலக்கி வைக்கவும் முடியாது
விதிகளுக்கு
விதிவிலக்காகவும் முடியாது

விதைகள்
விருட்சமாவதும் விதிதான்
விருட்சங்கள்
விறகாவதும் விதிதான்

பயணத்தின்
பாதைகளல்ல விதி
சந்திக்க வேண்டிய
சந்திகள்தான் விதி

பாதைகளை தீர்மானிக்கும்
பரிபூரண சுகந்திரம் உனக்கு உண்டு
சந்திகளை சந்திக்க வேண்டிய
சங்கடமான சந்தர்ப்பமும் உனக்கு உண்டு

பாதைகள் தோறும்
பதறி அழுகின்ற
பரிதாபமான நிலையில்
பலபேர் உண்டு

கணப்பொழுதில்
கடக்க வேண்டிய விதியை
கணம்தோறும் எண்ணியே
கனமான பொழுது கழிகிறது

விதிகளை
சந்தித்தே ஆக வேண்டும் - ஆனால்
விதிகளை
சிந்தித்தே வீணாக வேண்டாம்

அவ்வப்போது சந்திக்க வேண்டிய
அற்ப நொடிகள்தான் விதி - அதற்கு
ஆயுள் முழுவதையும் அர்ப்பணிப்பது
அடி முட்டாள்தனம் அல்லவா

பாதைகளில் உள்ள
சுகங்களையும்
சுவாரசியங்களையும்
சுபீட்சங்களையும்
சுவாசிக்க கற்றுக்கொள்

சந்திகளில் உள்ள
சங்கடங்களையும்
சஞ்சலங்களையும்
சரிவர சுதாகரித்துக்கொள்

அனுபவம்
ஆறாவது அறிவு
அங்கங்கேயுள்ள உதாரணங்கள்
அதனைக்கொண்டு
விதியை வெல்லலாம்

விதி - உன்னோடு
விளையாட விடாதே
விதியோடு - நீ
விளையாடு ...........

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்