25 செப்டம்பர், 2013

வெற்றியின் இரகசியம்

ஓரிரு முறை முயற்சி செய்து விட்டு,'இதற்கு மேல் என்னால் முடியாது.'என்று சொல்பவன் சராசரியானவன். 'என் இலட்சியத்தை எட்டும் வரை,முயற்சி செய்து கொண்டேயிருப்பேன்'என்று சொல்பவன் சாதனையாளன்.தோல்வியால் துவண்டவர்களை இந்த உலகம் நினைவில் வைத்திருப்பதில்லை.தோல்வி உங்களுக்கு புதிய உற்சாகத்தையும்,வைராக்கியமும் கொடுக்க வேண்டுமே தவிர,விரக்தியை கொடுக்கக் கூடாது.யாருக்கும் முதல் முயற்சியிலேயே மிகப்பெரிய வெற்றி கிடைத்து விடுவதில்லை.
தடைக்கற்களை முன்னேற்றத்துக்கான் படிக்கற்கள் என்று நினைத்துக் கொள்வோம். "வீழ்ந்தோம்" என்று இந்த உலகம் நம்மைப் பற்றிச் சொல்லும் போது,அதே உலகம் "வென்றோம்" என்று சொல்லும்படி சாதித்துக் காட்டுவோம்.தோல்வி என்றும் நிரந்தரமானதல்ல.நம்முடைய முயற்சிகளில் சில தோல்வியைத் தழுவலாம்.ஆனால் முயற்சியே எடுக்காமல் விட்டு விட்டால், நம்முடைய வாழ்க்கையே தோல்வியில் முடியும்.உடனுக்குடன் பலனை எதிர்பார்ப்பது உடனே பலன் கிடைக்காவிட்டால்,சோர்ந்து விடுவது சிறுபிள்ளைத்தனம்..பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒழிவது கோழைத்தனம்.ஓடி ஒழிவதால் பிரச்சனைகுத் தீர்வு கிட்டுவதில்லை.பிரச்சினையின் தன்மைக்கேற்ப,தீர்வு உடனே கிடைக்கலாம் அல்லது சில காலம் கழித்துக்கிடைக்கலாம்.

மூச்சு விடுபவன் மனிதன் அல்ல, முயற்சி செய்பவனே மனிதன்”

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸ்,
”ஒரே வேலைய திரும்பத் திரும்ப ஒரே மாதிரி செய்துவிட்டு வித்தியாசமான பலனை எதிர்பார்ப்பதற்குப் பெயர் தான் முட்டாள்தனம்.”

அல்பிரட் ஐன்ஸ்டீனிடம் முட்டாள்தனத்திக்கு விளக்கம் கேட்டபோது

இந்த உலகில் முயற்சி இன்றி வெற்றி பெற்றவர்களை அறிந்து இருக்கவே முடியாது..நமக்கு தோல்வியோ பின்னடைவோ வரும் போது,நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்...’தோல்வி அல்லது பின்னடைவுக்கு என்ன காரணம்? எங்கே தவறு நடந்தது? நான் இதிலிருந்து கற்றுக் கொண்ட பாடம் என்ன? இனிமேல் இந்த மாதிரி தவறு நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பவையே எனவே இவற்றை நினைத்துப் பாருங்கள்..உங்கள் தோள்களின் சுமை எளிதாகும்..

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்