12 மே, 2012

ஒரு கவி உனக்காக மட்டும்......


ஆயிரம் ஆயிரம் கவியாய் சொன்னேன்....அதில் அழகழகாய் சில பொய்களும் சொன்னேன்....பெண்ணென்றால் தாய் நீ தானே!

ஆயிரம் கவி சொல்லி...கவிஞன் தான் ஆகி என்ன படைத்தவளுக்காக ஒரு கவி பாட முடியவில்லையே...

பத்து திங்கள் சுமந்த தாயை பத்து தடவை நினைத்த போதும்....உன் மனம் இந்த சிறு பேதைக்கு சிக்கவில்லை...
 இந்த உலகில் சிறப்பாக வாழ கற்றுத்தந்தாய்,
கல்லறையை  கண்டும் அஞ்சாத மனம் தந்தாய்
ஆனால் எனக்கு அழுகை என்பதை கற்றுத்தர மறந்து விட்டாயே அம்மா......

...அன்னையர் தின வாழ்த்துக்கள்....

கருத்துகள் இல்லை:

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்