26 அக்டோபர், 2013

அச்சம்

பெண்களின் பலம் 
ஆண்மீது கொள்ளும் அச்சம் 
ஆண்களின் பலவீனம் 
பெண்மீது கொள்ளும் அச்சம் 

பெண்களின் 
ஆயுதம் அச்சம் 
ஆண்களின் 
ஆயுதம் அதிகாரம் 

இதுவே 
கலாச்சாரத்தில் கண்ணியமாகவும் 
காப்பியங்களில் அங்கமாகவும் 
காலந்தோறும் போற்றப்பட்டது 

இன்றைய காலத்தில் 
அச்சமெனும் ஆயுதத்தை 
தூக்கிஎறிந்துவிட்டு 
அதிகாரமெனும் ஆயுதத்தை ஏ 
ந்திக்கொண்டது பெண்னினம் 

அதிகாரம் என்ற ஆயுதத்தை 
இழந்ததினால் அச்சத்திற்குள் 
அடங்கிக்கொண்டது ஆண்ணினம் 

தன் தாய் தந்தைக்கு 
உணவளிக்க அச்சம் 
தன் தம்பி தங்கைக்கு 
உதவி செய்ய அச்சம் - இது 
ஆணினத்திற்கு மட்டுமல்ல 
பெண்னினத்திற்கும் வெட்கம் 

தான் உழைத்தாலும் 
தன் தேவைக்கே 
தன் மனைவியிடம் 
கெஞ்சும் துர்ப்பாக்கிய நிலை சிலஆண்களுக்கு 

மனைவிசொல் மந்திரமானது 
எல்லாம் சக்திமயம் ஆனதால் 
சிவமயமும் பயமயமாகியது 

இலச்சம் இருந்தாலும் 
இலச்சணம் இருந்தாலும் 
அச்சம் இல்லையெனில் அவள் பெண்ணில்லை 

அழகு இருந்தாலும் 
அறிவு இருந்தாலும் 
அடுப்பெரிக்க தெரியாதவள் பெண்ணில்லை 

அச்சமுள்ள பெண் 
உச்சத்தில் வைக்கப்படுவாள் 
அச்சமிலா பெண் 
எச்சத்திற்கு சமம் 

பெண்மையின் மென்மையும் 
பெண்மையின் மேன்மையும் 
அச்சத்தின் தன்மையிலே 
தங்கியிருக்கிறது 

கலாச்சாரத்தின் அச்சாணியே 
பெண்மையின் அச்சம்தான் 

பெண்மை அச்சத்தை இழக்கும்போது 
கலாச்சாரம் முட்டிமோதி உடைந்து போகிறது 

22 அக்டோபர், 2013

வீரத்தாயிடம் ஒரு வேண்டுதல்

மண்டாடிகேட்கிறேன்
கொண்டாட முடியாத வெற்றியும் 
திண்டாடுகின்ற தோல்வியும் 
வேண்டவே வேண்டாம் 

ஏமாற்றம் நிறைந்த மாற்றங்களும் 
ஏற்றங்கள் காணும் குற்றங்களும் 
சுற்றம் சூழும் பதற்றங்களும் 
அற்றே போகட்டும்

இயன்றவரை இயலாமை
இறந்தே போகட்டும்
இயலும் என்பது
இவ்வுலகை இயக்கி ஆளட்டும் 

8 அக்டோபர், 2013

ஏழையின் வானத்தில் .!!!!!!

ஒழுகுகின்ற ஓலைக் குடிசைக்குள் 
ஒழுகாத இடம் தேடி 
தோற்றுப் போகும் ஓர் ஏழை 

இவன் ......
தண்ணீரால் தாகத்தை மட்டுமல்ல 
பசியையும் போக்கத் தெரிந்தவன் 

இவன் வானத்தில் 
சூரியன் உதித்த காலங்கள் குறைவு 
பெரும்பாலான நாட்கள் 
இருளாகவே கழிந்துவிட்டது 

இடையிடையே கவலை மேகங்கள் 
கண்ணீர் மழை பொழிந்தது 
தோல்வியின் ரணங்கள் 
இடி மின்னலாய் முழங்கியது 

வறுமையின் வலிகள் 
சிவப்பு வானவில்லை தோன்றியது 
பசியால் கொட்டாவி 
புயல் காற்றை வீசியது 

அதிஷ்டங்கள் 
கார்த்திகைபிறையாய் காட்சியளித்தது 
கனவுகள் 
நிலவாய் உலா வந்தது 

எதிர்பார்ப்புகள் 
நட்சத்திரங்களாய் ஜொலித்தது 
ஆறுதல் வார்த்தைகள் 
விடிவெள்ளியாய் ஒளிர்ந்தது 

மொத்தத்தில் இவன் வானத்தில் 
நிஜங்கள் இருளாகவும் 
நினைவுகள் வெளிச்சமாகவும் !!!

7 அக்டோபர், 2013

நீயாகிய நான் ...

உன்னை நான்
இனி காயப்படுத்தப்போவதில்லை
உன்னைக் காயப்படுத்திவிட்டு
வீடு திரும்பிய போது உன்னைவிட  அதிகம்
காயப்பட்டுக்கிடந்தவன் நான்தான்

குழப்பத்தில் சிதறிப்போய்விட்டேன்
உன்னை அடித்ததில்
எனக்கு தழும்புகள் வந்ததால்

பிறகு புரிந்து கொண்டேன் -நான்
காயப்படுத்திக்கொண்டது உன்னை
தண்டித்துக்கொண்டது என்னை
ஏனென்றால் உண்மையில்
நீ என்பது நான்தான்

நியூட்டனின் விதிக்குள்
ஒரு ஆன்மிகம் இழையோடியதை
உன்னால் படித்துக்கொண்டேன்

நான் உனக்கு  செய்தது எல்லாம்
எனக்கே வந்துசேர்ந்தது
நான் எனக்கே செய்தது ஆனது
ஏனென்றால் உண்மையில்
நீ என்பது நான்தான்
அதைப் போலத்தான்
நான் என்பதும் நீதான்

என் மீது கற்கள் வீசினால்
உன் மீதும் கற்கள் வீசப்படும்
என் மீது பூக்கள்  தூவினால்        
உன் மீதும் பூக்கள் தூவப்படும்
என்னை நீ ஆசிர்வதித்தால்
நீயும் ஆசிர்வதிக்கப்படுவாய்

நீ எதைக் கொடுக்கிறாயோ
அது உன்னிடம் இருக்கும்
எவ்வளவு கொடுக்கிறாயோ
அவ்வளவு உன்னிடம் இருக்கும்

அன்பைக் குறைவாக வழங்கினால்
உன்னிடம் குறைவாக இருக்கும்
நிறைவாக வழங்கினால்
உன்னிடம் நிறைய இருக்கும்
கொடுக்கக் கொடுக்க
உன்னிடம் கூடிக்கொண்டேபோகும்

நான் சேமித்ததை எல்லாம்
நான் இழந்துவிட்டேன்
நான் கொடுத்தது எல்லாம்
எனதே ஆகிவிட்டது

எதையும் சேமித்து விடாதே
கொடுத்து விடு
உன்னிடம் இருப்பதை
என்னிடம் கொடுத்துவிடு -அது
உன்னிடம் தான் இருக்கும்

ஏனென்றால் உண்மையில்
நான் என்பதும் நீதான்

ஓஷோவின் 'புரட்சி விதை'

அமைதியான அந்த
இரவு நேரத்திலே
யாரோ புல்லங்குழல்
வாசித்துக்கொண்டு இருந்தார்கள்
நிலவொளி பிரகாசித்துக்கொண்டிருந்தது
ஏகாந்தமிக்க குளிர் நிறைந்த இரவு
எங்கிருந்தோ காற்றிலே
மிதந்து வரும் புல்லாங்குழலின் ஓசை
இனிய சொப்பனமாகத் தோன்றியது
நினைத்தும் பார்க்க முடியாத அளவிற்கு
அது மிகவும் அழகாக இருந்தது
ஒரு மூங்கிலின் வெற்றுக் குழலில்
எத்தகையதோர் அமிர்தமான இசை

வாழ்க்கையும்
ஒரு புல்லாங்குழல் போலத்தான்
தன்னிலே அது வெறுமையாக
சூன்யமாக உள்ளது அதனால் கூடவே
ஒரு மாபெரும் சங்கீதத்தையும்
பிரதிபலிக்கும் தகுதியையும் பெற்றுள்ளது

எல்லாம் அதை
மீட்டுபவர்களை பொறுத்து உள்ளது
எவ்வாறு ஒருவன்
அதை மீடடுகிறானோ வாழ்க்கையும்
அவ்வாறே மாறிவிடுகிறது
அதனை நிர்மாணிப்பது அவனே!
சொர்க்கத்தையோ நரகத்தையோ
அமைத்துக்கொள்ள அவன்
முழு சுதந்திரம் பெற்றிருக்கிறான்

என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்