8 அக்டோபர், 2011

தன்னை மறந்த நிலையில் தான்...


தன்னை மறந்த நிலையில் தான்....
      ஒருவன் கவிதை எ‌ழுதுகிறான்      
      ஒருவன்  கழுத்தை அறுக்கிறான்
      ஒருவன் தீயிடுகிறான்
      ஒருவன்  தீமிதிக்கிறான்


தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் சக்தி பெறுகிறான்      
      ஒருவன் முக்தி பெறுகிறான்
      ஒருவன் வாழ்வை வெல்கிறான்
      ஒருவன்  மரணத்தை கொள்கிறான்


தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் அமைதி இழக்கிறான்      
      ஒருவன்  கோவம் கொள்கிறான்
      ஒருவன் சாபம் கொடுக்கிறான்
      ஒருவன்  நியாயம் மறக்கிறான்


தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் வீடுதுறந்து துறவியாகிறான்      
      ஒருவன்  தன்னை மறந்து துரோகியாகிறான்
      ஒருவன் காதலித்து பித்தனாகிறான்
      ஒருவன்  கடவுளின் பக்தனாகிறான்


தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் போதி மரத்தடியில் ஞானமடைகிறான்      
      ஒருவன்  மரத்தை வெட்டி பாவியாகிறான்
      ஒருவன் இம்சை செய்து இட்லராகிரான்
      ஒருவன்  அகிம்சை செய்து மாகாத்மாவாகிறான்


தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் ஆசைக் கொண்டு திருடனாகிறான்      
      ஒருவன்  காமம் கொண்டு காமூகனாகிறான்
      ஒருவன் சட்டம் இயற்றி மேதையாகிறான்
      ஒருவன்  சட்டைக் கழற்றி ஞானியாகிறான்


தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் பணத்திற்காக கொலை செய்கிறான்      
      ஒருவன்  நாட்டுக்காக உயிர் கொடுக்கிறான்
      ஒருவன் ஆட்சியேறி அடிமை செய்கிறான்
      ஒருவன்  அடிமையாயிருந்தே புரட்சி செய்கிறான்


தன்னை மறந்த நிலையில் தான்...
      ஒருவன் நாட்டை துறந்து காடுபோகிறான்  (ராமாயணம்)      
      ஒருவன்   சூதாடி சூழ்ச்சியில் விழுகிறான் (மகாபாரதம்)
      ஒருவன்  கொலைபழிக்கு ஆளாகிறான் (சிலப்பதிகாரம்)
      ஒருவன்  முல்லைக்கெல்லாம் தேர் கொடுக்கிறான்  (பாரி)



தன்னை மறந்த நிலையில் தான்
      ஒருவன் நபிகள் மீது கல்‌லெறிகிறான்      
      ஒருவன்  ஏசுவை சிலுவையில் அறைகிறான்
      ஒருவன் சிலைகளை கல்லென்கிறான்
      ஒருவன்  சிவன் தலை மீதே கை வைக்கிறான்


      அனுமன் அமைதியாய் இருந்ததும்...
      ராவணன் மதி இழந்ததும்....
      மகாவீரர் அரண்மனையில் இருந்ததும்...
      ஆதிமனிதன் குரங்கில்  இருந்ததும்...
      அ‌லெக்சண்டர் ஆசைக் கொண்டதும்...
      சிவன் சக்தியை எரித்ததும்...
      கண்ணதாசன் மதுவில் இருந்ததும்...

தன்னை மறந்த நிலையில் தான்...      

25 செப்டம்பர், 2011

யாருடைய வீடு

இந்த வீடு உன்னுடையதென்று சொல்லுவதற்கு இல்லை 
ஆனாலும் நீ சொல்லிக்கொண்டு இருக்கிறாய் 
இது உன்னுடையதென்று 

பல்லிகள் , கரப்பான் பூச்சிகள் 
எல்லாமே உன் வீட்டிலுள்ளன
நீ வளர்க்கும் நாயும் 
உன் பூமரங்களும் 
உள்ளன இந்த வீட்டில் 
நீ சொல்கிறாய் இன்னும் 
இந்த வீடு உன்னுடையதென்று 

உன் நாய் அதன் இன்னொன்றிடம் 
இதைத்தன் வீடென்று   சொல்லுமே 
உன் வேலையாள் சொல்வான் 
தன் சகாவிடம் இது தன் வீடென்று.
கரப்பான் பூச்சி நினைக்கும் 
இது தன் வீடென்று.
பல்லி யோசிக்கும் 
இது தானிருக்கும் வீடென்று சிலந்தியெண்ணும் 
இது தன் வீடிருக்கும் வீடென்று 
உன்னுடைய பெண் நினைக்கிறாள் 
இது தன்னுடைய வீடென்று

இன்னும் நீ சொல்லிக்கொண்டிருக்கிறாய் 
இந்த வீடு உன்னுடையதென்று 



23 ஆகஸ்ட், 2011

Father Forever

I feel safe when you are with me;

You show me fun things to do;



You make my life much better;

The best father I know is you.


I’m happy you’re my Dad


And so I want to say


I have a loving father forever......

24 ஜூலை, 2011

உன்னோடு ஒரு நிமிடம்

பல நிமிடங்கள் சென்றாலும் உன்னோடு நான் கழிப்பது ஒரு நிமிடமாக இருந்தாலும் அது எனக்கு மிகவும் பொன்னானது தோழி
என் ஜனனம் பூமியில் உதித்ததற்கு கடவுள் தந்த கொடையே என் தோழி
நம் நட்பு நமக்கு  நினைவு தெரிந்த காலத்திலிருந்தே தொடர்கிறது
உன்னோடு பேசியது   ஒரு நிமிடமாக இருந்தாலும் கடவுளுக்கு 
நன்றி சொல்வேன் 
நான் இந்த பாரில் என் சகோதரிக்கு அடுத்ததாய் 
நான் நேசிக்கும் ஒரு ஜீவன் என் தோழி நீ 
உன்னோடு இருக்கும் ஒவ்வொரு  நிமிடமும் எனக்கு மிகவும் பிடிக்கும் தோழி 
எப்போதும்  காத்திருப்பேன் அந்த நிமிடத்திற்காக  என் அன்பு தோழி 
இருந்தும் நீ என்னை விட்டு விலகி செல்லும் நிமிடங்கள் என்னை மிகவும் வாட்டும்..........எப்போதும்  உன்னோடு ஒரு நிமிடம் எனக்கு போதும் என் கவலைகளை மறப்பதற்கு   தோழி ....

23 ஜூலை, 2011

நான் படித்ததில் எனக்கு பிடித்த நட்பு

வெல்லும் வரை தோல்வி..!
சிரிக்கும் வரை கண்ணீர்...!
உதிரும் வரை பூக்கள்...!
மறையும் வரை நிலவு...!
மரணம் வரை நம் நட்பு...!

விரும்பிய ஒருத்தரை மட்டும்
சொந்தமாக்கிக் கொள்ளும் காதல்...!
விரும்பிய அனைவரையும் 
சொந்தமாக்கிக் கொள்ளும் நட்பு..!

ம் நட்பை ஓவியமாய் வரைய நினைத்தேன்
ஆனால் முடியவில்லை..!
ஏன் தெரியுமா..?
ரோஜாவை வரைந்து விடலாம்
அதன் வாசத்தை எப்படி வரையமுடியும்...!



19 ஜூலை, 2011

மூன்றில் அடங்குகிறது என் வாழ்க்கை

1) நான் விருப்பும் மூன்று விஷயங்கள்...?

  • இந்த உலகத்தின் வினாடிகளை கவிதையில் விவரிப்பது...
  • எல்லா நிலையிலும் மனிதநேயத்தை கடைப்பிடிப்பது..
  • மற்றும் அம்மா.. அப்பா......அண்ணா.....அக்கா...
2) நான் விரும்பாத  மூன்று விஷயங்கள்

  • எனக்கு ரொம்ப பிடித்தவர்கள் என்னை திட்டுவது (specially my father)
  • முடியாத விஷயத்தில் வாதம் செய்வது...
  • தன்னம்பிக்கை இல்லாத வாழ்க்கை  
3) நான் பயப்படும் மூன்று விஷயங்கள்

  • எல்லா நிலையிலும் என்னை பக்குவப்படுத்தும் என் மனசாட்சி...
  • தமிழை தவறாக பேசுவது 
  • அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் மறைத்து வைத்திருக்கும் இந்த எதிர்காலம்...
4) நான் ரசித்த மூன்று திரைப்படங்கள்...?

  • ஜோதிகாவின் மொழி 
  • பார்த்தீபனின் கண்ணாடிப்பூக்கள் 
  • சிவாஜியின் கர்ணன்
5) நான் விருப்பி அதிக முறை கேட்ட மூன்று திரைப்பாடல்கள்...?

  • ஒவ்வொரு  பூக்களுமே.... (ஆட்‌டோகிராப்)
  • முழுமதி அவளது முகமாகும் (ஜோதா அக்பர் )
  • கடவுள் தந்த அழகிய வாழ்வு ... (மாயாவி)
6) இது இல்லை என்றால் என்னால் வாழ முடியாது...?

  • கடவுள் தந்த சுவாசம் 
  • முடிந்த வரை நான் க‌டைபிடிக்கும் உண்மை...
  • என் நியாயமான கோவங்கள்...
7) கற்று கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்..?

  • யாருடனாவது சண்டையிட்டபின்  அதை மறந்து விட...
  • செந்தமிழை தெளிவாக ..
  • விதியை வெல்லும் வழி..
8) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்....?

  • தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்வது...
  • அதை இன்னும் மறக்கலையா என சமாதானம் படுத்துவது..
  • குழந்தையின் அழுகுரல்...
9) நான் பெருமையாய் நினைக்கும் மூன்று காரியங்கள்...?

  • நானும் ஷக்தி பண்பலையும் 
  • என் கவிதைகள்....
  • நான் பாடும் பாடல்கள் (திரைப்பட பாடல் )
10) எனக்கு புரியாத மூன்று விஷயம்...?

  • பௌதிகவியலில் எறியம்(projectile)
  • ஆறறிவு இருந்தும் பயன்படுத்தாத மனிதனின் குணம்...
  • என்னை நான் வருத்துவது
11) வாழ் நாள் முடிவதர்க்குள் செய்ய நினைக்கும் மூன்று விஷயம்...?

  • நான் வாழ்ந்ததற்க்கான அடையாளங்களை இந்த உலகிற்க்கு விட்டு செல்லுதல்...
  • தமிழுக்கும் இந்த சமுதாயத்திற்க்கும் என்னால் ஒரு அடையாளம்...
  • என் அண்ணாவை சந்தித்தல்
12) மறக்க முடியாத(கூடாத) மூன்று நண்பர்கள்...?
  • எனக்கு பலவற்றை புரியவைத்த என் தோழி (என்னுடன் இல்லை)
  • பதிவுலகில் என்னை அறிமுகப்படுத்திய சக்தியின் சொந்தங்கள் 
  • எனக்கு துணையாய் அவதரித்த என் சகோதரி
13) என் தளத்தில் எனக்கு பிடித்த மூன்று பதிவுகள்...?

  • பாடசாலை 
  • தாய் மடியே உன்னை தேடுகிறேன் 
  • நட்சத்திரவீதியில் ஒரு தாலாட்டு பாடவா
 (யான் பெற்ற இன்பம் இவர்களும் பெறட்டும்)

5 ஜூலை, 2011

நட்சத்திரவீதியில் ஒரு தாலாட்டு பாடவா

இந்த வரிகளை பார்த்தவுடனே என் மனதில் ஒரு பாசமகனின் ஏக்கம் எப்படி இருக்குமெனவும் ஒரு பாசகவிஞனின் இதயத்தின் வலிகளை வரிகளாகவும் அறிந்து கொண்டேன்

"உதவியாய் ஒன்று உன்னிடம்
எனக்கொரு குழந்தையாய் நீ வர உனக்கொரு தந்தையாய்
நான் தாலாட்டு பாடவா ?
மறுஜென்மத்திலேனும் நான் தாலாட்டுப்பாட வா ...."

"தந்தை பெயர் மட்டுமா சுமந்தாய் 
மனதில் குழந்தையாய் சுமந்த தாய் அன்றோ ?"


"இவன் உழைப்பில் எனக்கு உப்பிடுவான் என்று
ஊரெல்லாம் பேசிவைத்துவிட்டு ..
என் உதிரத்தில் உப்பில்லாமல் ஆக்கிவிட்டு
எங்கே கரைந்து போனாயோ"



these line are very regrettable & heart touchable......
இந்த எதிர்பார்ப்பை தீர்க்க அந்த தந்தை மறுஜென்மத்திலாவது உங்கள் தாலாட்டை கேட்பதற்கு இந்த பூமியில் அவதரிப்பார்....

30 ஜூன், 2011

சொந்தக் கையெழுத்து - Autograph of Priya

என்னை விட்டு விலகி செல்லும் பாடசாலை நாட்கள்,
பதினைந்து எமக்கு ராசியானதோ? இல்லையோ?தெரியவில்லை  பதினைந்து பட்டாம்பூச்சி நெஞ்சங்களை ராசியாக்கியது.இந்த பள்ளி சோலை வனம் தான்

நாளை நம் பிரிவால் இது பாலைவனமாகிவிடுமோ? என்ற நினைவே அலைகிறது என் மனதில் !
நிச்சயமாக  நேற்றும் இன்றும் என்றும் சோலை வனமாகவே இருக்கும் எங்கள் பள்ளி நினைவுகள் !

28 ஜூன், 2011

உயிர் கொண்ட நட்புக்கு , கல்லறை போய் சேர்ந்தாலும் பிரிவு என்பது இல்லை......

உயிரின்  சுவாசம்  மூச்சு 
கண்களின்  சுவாசம்  கனவு .
இதயத்தின்  சுவாசம் துடிப்பு .
என்  'நட்பின் ' சுவாசம் ,
நீ  தான் அன்பு தோழி.




11 ஜூன், 2011

நட்பே சிறந்தது


என் இதயத்திற்கும் ,
என் நண்பிக்கும் 
ஒரு ஒற்றுமை உண்டு ,
இருவரும் எனக்காக ,
துடிப்பவர்களை .

நட்பு ஒரு கைக்குழந்தை போல் :
யார் அன்போடு நடந்து கொண்டாலும் 
அவர்களோடு வந்து விடும் 

நிழல்கள் அழிந்தாலும் நட்பின் நிஜங்கள் அழிவதில்லை 

உன் உயிர் போகும்போது 
என் உயிர் தந்து
உன் உயிரை உயிர்பிப்பாள்

வாழ்க்கை

சிவப்பு மனிதனுக்கும் நிழல் கறுப்புதான்
கருப்பு மனிதனுக்கு இரத்தம் சிவப்புதான்
வண்ணங்களில் இல்லை வாழ்க்கை
மனிதா எண்ணங்களில் உள்ளது வாழ்க்கை


நீ நேசிக்கும் பலர் .... 
உன்னை மறக்க நினைத்தாலும் 
உன்னை நேசிக்கும் சிலரை ... 
நீ நினைக்க மறக்காதே 

சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது !சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விடவும் முடியாது !சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இறுதிநாள் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மாறவாதீர்..

.சந்தோஷம் இருக்கும் இடத்தில் வாழ நினைப்பதை விட , நீ இருக்கும் இடத்தில் சந்தோஷத்தை உண்டாக்கு . உன் வாழ்க்கையில் நிறைவு இருக்கும்

வாழ்கையில் தடுமாறி கொண்டு இருப்பதை விட ,ஒரு முறை விழுந்து எழுவது சிறந்தது.



10 ஜூன், 2011

மௌனம்


 பேசும் வார்த்தையை விட பேசாத
மௌனத்திற்கு  அதிகம்
அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை
எல்லோர்க்கும் புரியும்
மௌனம் மௌனத்தை
நேசிபவர்களுக்கு மட்டும்
தான் புரியும்......

2 ஜூன், 2011

மழையே


உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏன் தெரியுமா,
நான் இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தான்!....



அன்பான ஒருவரிடம் தோற்று பாருங்கள் .. வெற்றியை விட தோல்வி
எத்தனை சுகம் என்று தெரியும் ...!



23 மே, 2011

பாடசாலை

காலங்கள் மாறலாம் நேரங்கள் கழியலாம்
என் இனிய பாடசாலை நாட்கள் என்றுமே அழியாது
என் இதயத்துடிப்புக்கு அர்த்தம் தேடித்தந்தது பள்ளிக்கூடமே
பள்ளியின் முதல் நாள் எனது இறுதி நாள் வரை மறையாது
பள்ளியின் முதல் நட்பு என்றுமே அழியாது
தோழியர் கூட்டமாக பள்ளி சூழலை சுற்றியது
தோழியராய் மேடை ஏறி இனிய கீதம் இசைத்தது
உணவை பகிர்ந்து உண்டது
தோழியர் பெயரை மேசையில் கிறுக்கி இரசித்தது
மாணவ தலைவர்களாக பதவி ஏற்றது
உறுப்படியாக தேடிய நட்புகள் பள்ளியில் மட்டுமே
எனது கண்களில் இருந்து நீர் வருகிறது எனது பாடசாலை நாட்களை இழக்க போகிறேன் என்ற போது......
நான் இழந்த பலவற்றை பெற்றது எனது பள்ளிகூடத்திலே

கருவறை இன்பம் சிலநாட்களே ஆனால் எனது பள்ளியறை எனது இறுதி நாள்வரை நீடிக்கும்
வாழ்வில் இன்பம் என்பது பள்ளியிலே அதிகம்  


வாழ்வில் மறக்கவே முடியாத நாட்கள் மீளவும்  பார்க்க ஆசை படும் நாட்கள் எனது பள்ளி நாட்கள்  

21 மே, 2011

நட்பில்........

ஜீவன் உள்ளவரை மனிதன் 
பணம் உள்ளவரை மரியாதை 
நேசம் உள்ளவரை பாசம் 
என் உயிர் உள்ளவரை நம் நட்பு


இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும் ,
ஆனால் அந்த இடைவெளி கூட உன்னை பற்றி தான் நினைக்கும் ...
that is friendship


இன்னொரு பிறவி பிறக்க போவதில்லை 
இன்னொரு நட்பு உன்னை போல கிடைக்க போவதில்லை ,
அதனால் 
இப்பிறவியில் கிடைத்த உன்னை தவற விடுவதில்லை ...





20 மே, 2011

தோழமை

ஆண்டவன் வரைந்த வரைபடம் நட்பு

அதி சிறந்த பரிசு நட்பு
நட்புக்கு நிகர் 
நல்ல நட்பே! 
அழகிய மாடம் நட்பு
தூய்மை அதன் அரண்
மெய்யாய் இருக்கும் வரை 
மெய்க் காவல் நட்பு! 
உன்னை எடை போட 
உன் நட்பு போதுமாகும்
நம்பிக்கை நாணயம் 
சேர்ந்த கலவை நட்பு
துன்பத்தில் சம பங்கு 
நல் நட்பு
உன் விழியில் தூசி 
நட்பின் விழியில் கண்ணீர் 
நல்ல நட்பு 
நாட்பட்டே கிட்டும்

17 மே, 2011

அன்புத் தோழி

Friends Forever
பூத்து உதிர்ந்தப் பூவை
மண்ணில் கண்டேன்..
பூத்தும் உதிராத நட்பை
உன்னில் கண்டேன் 
என் அன்புத் தோழி!

16 மே, 2011

கை கொடு மனிதா


வாழ்கையின்   தொடக்கம் முதல் இறுதி வரை கை கொடுப்பவனே மனிதன்
ஒவ்வொரு படிகளிலும் எம்மை தூக்கி விட்டவர்களும் உள்ளார்கள்
 ஒவ்வொரு படிகளிலும் எம்மை தூற்றி விட்டவர்களும்  உள்ளார்கள்

வாழ்கையில் நல்லதோ தீயதோ அனைத்தையும் பகிர்வதிற்கு கடவுள் கை கொடுத்து தந்த பரிசு என் இனிய சகோதரி
துன்பங்களில் இருந்து என்னை மீட்ப்பதற்கு கை கொடுத்தது என் உடன் பிறப்பே


9 மே, 2011

தாய் மடியே உன்னை தேடுகிறேன்

கடவுள் உருவம் பெற்று
கடவுளாகவே பூமியில் உதித்தவளே அன்னை
கண்ணை விட சிறந்த உறுப்பு இல்லை
தாயோடு ஒப்பிடத்தக்க தெய்வம் இல்லை
அனைத்திலும் மேலானவளே தாயானவள்
இவ்வுலகில் மனிதராய் பிறந்து புகழ் பெற்று வாழ
வழி காட்டியவள் அன்னையே
கண்டிப்புடன் மட்டும் அல்லாமல் பாசத்தோடும் எங்களை வழிநடத்துபவள் அன்னையே
இந்த பூலோக வாழ்வை எனக்கு பரிசாக தந்ததற்காக என் உயிரிலும் மேலான தாய்க்கு நன்றி
கல்லறை கதவுகள் திறந்தாலும்
என் கருவறை நினைவுகள் என்னை விட்டு அழியாது...
பாசமிகு தாயே உன்னை போற்றி பாட இந்த ஒரு வாய்ப்பு கிடைத்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்
தாய் மடியே உன்னை தேடுகிறேன்

தாய் மடியை எப்போதும் தேடும் பாசமகளின் இதய வார்த்தைகள்
என்றும் அழியாது என் அன்னையின் நினைவுகள்
"கல்லறை கதவுகள் திறந்தாலும்
என் கருவறை நினைவுகள் என்னை விட்டு அழியாது"

27 ஏப்ரல், 2011

உன் மொழி தமிழ் மொழி



தடுக்கி விழுந்தால்
மட்டும் அ...ஆ...



சிரிக்கும்போது

மட்டும் இ..ஈ...



சூடு பட்டால்

மட்டும் உ...ஊ...



அதட்டும்போது

மட்டும் எ..ஏ...



ஐயத்தின்போது

மட்டும் ஐ...



ஆச்சரியத்தின்போது

மட்டும் ஒ...ஓ...



வக்கணையின் போது

மட்டும் ஒள...



விக்கலின்போது

மட்டும் ...ஃ



என்று தமிழ் பேசி

மற்ற நேரம்

வேற்று மொழி பேசும்
தமிழரிடம்
மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று...!!!

26 ஏப்ரல், 2011

Why GOD Gave Us Friends

GOD knew that everyone needs
Companionship and cheer,
He knew that people need someone
Whose thoughts are always near.

He knew they need someone kind
To lend a helping hand.
Someone to gladly take the time
To care and understand.

GOD knew that we all need someone
To share each happy day,
To be a source of courage
When troubles come our way.

Someone to be true to us,
Whether near or far apart.
Someone whose love we'll always
Hold and treasure in our hearts.

That's Why GOD Gave Us Friends

உன் பாதையில்.........

உன் பாதையில்
எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?
உன் பாதையில் விஷச்செடிகளா ?
நிறையக் காண்பாய்
எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?
உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்
சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்
நின்று விடாதே
திரும்பிப் பார்
வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்... 

14 ஏப்ரல், 2011

Any man can be a father, but it takes a special person to be a dad

மறக்கவில்லை நான் எதையும்!
நான் உயரவேண்டும் என்பதற்காக
நீ குனிந்த இடங்கள் தான்
எத்தனையோ!

நான் அவதிப்படாமல் வாழ
நீ உன் கனவுகளைத்
தியாகம் செய்தது தான்
எத்தனையோ!

மாடுதன்
ரத்ததைப் பாலாய்க் கொடுக்கிறது
நீ
உன் ரத்தத்தையும்,
வியர்வையும் கலந்து
எனக்கு
வியர்வையற்ற
ஒர் வாழ்க்கையை கொடுத்திருக்கிறாய்

பக்கத்துவீட்டுப்பையனைப் பார்த்து
நம் நிலையரியாமல் நான் விரும்ப
உன் சக்திக்குமீறி வாங்கினாய்
எனக்கு ஒரு சைக்கிள்

எதிர் வீட்டில் சென்று நான்
ஒளியும் ஓலியும் பார்த்ததால்
உன் வரவுக்கு மீறி வாங்கினாய்
ஒரு வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி

நான் படித்த பட்டம்
நான் இன்று இருக்கும் பதவி
எதுவும் எனதில்லை
நீ
என்னைப்பற்றி அன்று
கனவுகளின்றி இருந்திருந்தால்!!

உன் கோபம் எரிமலையைப் போன்றது
எதிர்த்து நிற்பவர்களைப் பொசிக்கிவிடும்
அதைக்கண்டு பெருமை அடைந்திருக்கிறேன் பலமுறை;
அநேக நேரம்
உன் கோபம்
நியாயத்தை நிலைநிறுத்த
புறப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்களே

உன்னைச் சர்வாதிகாரி
என்றே வர்ணிப்பேன்
பள்ளிப்பருவ நண்பர்களிடம்
ஆனால்
நீ திட்டியதும், அடித்ததும்
ஒர் சிற்பி சிலைச்செதுக்க
உளியால் பாறையை அடித்ததற்குச்
சமம் என்று உணர்ந்தேன்
பின்பு!

நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
ஒர் தகப்பனாய் கோபப்படாமல்
ஒர் நண்பனாய்
இக்கல்யாணம் எப்படியும் நடக்கும்
என்று தைரியம் சொன்னாயே
அதை நினைத்தால்
இன்றும் என்னுள் சக்திப்பிறக்குது
இமயத்தைப் புரட்டிப்போட!

நீ ஒர் நல்ல தந்தையாய்
வாழ்ந்துகாட்டிவிட்டாய்
நான் ஒர் நல்ல தமயனாய்
இருந்துகாட்ட
எத்தனைக்காலம் தான் ஆகுமோ?



என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா

நான் வளர உரமானாய் நீ என் வாழ்க்கையில் வரமானாய் நீ இனி மறு ஜன்மம் உண்டெனில் உன்னை மகளாய் பெற்றெடுத்து என் நன்றி கடன் தீர்ப்பேன்